கோத்தாபாரு:
கிளந்தானில் நடைபெற்ற இரவு விருந்தில் அரங்கேறிய கவர்ச்சி நடனம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
கிளந்தான் உள்ளூராட்சி, வீட்டுவசதி, சுகாதாரம், சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் ஹில்மி அப்துல்லா இதனை கூறினார்.
கடந்த சனிக்கிழமையன்று தானா மேராவில் இரவு விருந்தில் ஒரு ஆடம்பரமான நடன நிகழ்ச்சியை ஒரு சுரங்க நிறுவனத்தின் ஏற்பாடு செய்திருந்தது.
இது தொடர்பில் தானா மேரா நகராண்மைக் கழகம் விசாரணை அறிக்கையை திறந்துள்ளது.
சம்பந்தப்பட்ட விழா பள்ளிக் கூடத்தில் நடைபெற்றதால், சீன தேசிய வகைப் பள்ளியும் விசாரிக்கப்பட்டது.
மேலும் நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கான அனுமதிக்கு ஏற்பாட்டாளர்கள் விண்ணப்பிக்கவில்லை என்று விசாரணையில் கண்டறியப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பெரும்பாலான விருந்தினர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.
nambikkai
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments