
ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அங்கு முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்றது. அடுத்ததாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியிலும் வென்ற பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே பெற்றது. அந்த நிலையில் இரண்டாவது போட்டி இன்று புலவாயோ நகரில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை அடுத்து களம் இறங்கிய அந்த அணிக்கு துவக்க வீரர்கள் பிரையன் பெனட் 21, மருமணி 16 ரன்கள் எடுத்தார்கள். அதன் காரணமாக 37/0 என்ற ஓரளவு நல்ல துவக்கத்தை ஜிம்பாப்வே பெற்றது. ஆனால் அப்போது அவர்களை அவுட்டாக்கிய பாகிஸ்தான் பவுலர்கள் மேஜிக் போல பந்து வீசினார்கள்.
அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் டியோன் மேயர்ஸ் 3, கேப்டன் சிகந்தர் ராசா 3, ரியான் புர்ல் 1, க்ளைவ் 9 என அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்பினார்கள். அடுத்து வந்த வீரர்களும் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பினார்கள். இறுதியில் 12.4 ஓவரில் ஜிம்பாப்வே அணி 57 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து ஜிம்பாப்வே மோசமான வரலாற்று சாதனை படைத்தது. இதற்கு முன் இதே வருடம் இலங்கைக்கு எதிராக 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானதே ஜிம்பாப்வே அணியின் முந்தைய குறைந்தபட்ச ஸ்கோராகும். மறுபுறம் அபாரமாக பந்து வீசிய பாகிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக சூபியன் முஹீம் 2.4 ஓவரில் 3 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
அவருடன் அப்பாஸ் அப்ரிடி 2 ஓவரில் 2 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் 58 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு சாய்ம் ஆயுப் 36* (18), ஒமைர் யூசுப் 22* (15) ரன்கள் எடுத்தார்கள். அதனால் 5.3 ஓவரிலேயே 61-0 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
அந்த வகையில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக தங்களுடைய வீரமான ஆதிக்க செயல்பாடுகளை தொடரும் பாகிஸ்தான் 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரையும் இப்போதே வென்றுள்ளது. மறுபுறம் சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து ஜிம்பாப்வே பரிதாப தோல்வியை சந்தித்தது. இதை அடுத்து கடைசி போட்டியில் ஒயிட்வாஷ் தோல்வியை தவிர்க்கும் முனைப்புடன் அந்த அணி விளையாட உள்ளது.
crictamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments