Ticker

6/recent/ticker-posts

Ad Code



ராஜகுமாரியின் சுயம்வரம்-61


அவர்களைப் பார்த்த பானு கூறினாள்,
"மருத்துவர் உங்களை எதிர் பார்த்துக் காத்திருக்கின்றார் விரைந்திடுங்கள்."என்றாள் புன்னகையுடன்.

" ஓ அப்படியா?,ஏன்" எனக் கேட்டான் காவலன் விசு.

"தெரில" எனப் பதில் கூறியவாறே நடந்தாள் பானு.  போகும் போதே தோழிகளிடம் சென்று "சாந்தியும் சுமதியும் இன்று ராஜகுமாரிக்குத் துணையாகப் போங்கள் நாங்கள் வீட்டுக்குச் செல்கின்றோம் இவை மந்திரி  அவர்களின் கட்டளை" எனக்கூறி விரைந்தாள் மீனா .

அவர்கள் சென்றதும் சாந்தியும் சுமதியும் ராஜகுமாரியின் அறைக்கு விரைந்தார்கள். அங்கே இருந்த மருத்துவரிடம் தங்களை அறிமுகம் செய்து விட்டு ராஜகுமாரியின் அருகே போனார்கள்.

அப்போது மருத்துவர் அவர்களை அழைத்து"உடனே ராஜகுமாரியைக் குளிக்க வைத்து அலங்காம் செய்து உணவு கொடுத்து விட்டு அழைத்து வாருங்கள்" எனறார்.

அவர்களும் சரி எனக் கூறி விட்டு விரைந்தார்கள்.

காவலன் விசு மருத்துவரிடம் வந்து "ஏதேனும் உதவி வேண்டுமா? மருத்துவரே" எனக் கேட்டான்.

உடனே குமரன் "ஆம் தேவை தான். தற்போது அல்ல. ராஜகுமாரி  வந்த பின்னரே. இப்போது நீங்கள் இந்த அறையைச் சுத்தம் செய்ய ஏற்பாடு பண்ணுங்க" என்று கூறியவன் சற்று நகர்ந்து போய் ஏதோ ஒரு நூலைப் படித்துக் கொண்டு இருந்தான். காவலன் விசு சுத்தம் செய்வோரை அழைத்து வந்து விட்டு கவனித்துக் கொண்டு இருந்தான்.

(தொடரும்)



 Ai SONGS

 



Post a Comment

0 Comments