Ticker

6/recent/ticker-posts

Ad Code



மலேசியாவில் சிவப்பு நிறத்தில் வெள்ளம்?


மலேசியாவில் சிவப்பு நிற வெள்ளத்தைக் காட்டும் காணொளி TikTokஇல் பரவலாகக் பகிரப்படுகிறது.

காணொளியைக் கண்ட இணையவாசிகள் மழைவெள்ளம் சிவப்பாக எப்படி மாறியது என்று குழம்பிப்போன நிலையில் உள்ளனர்.

அந்தக் காணொளி கிளந்தான் (Kelantan) மாநிலத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

காணொளியைச் சற்று உற்றுப் பார்த்தால் அதில் ஏதோ கலக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

காணொளியைப் பகிர்ந்த TikTok பயனீட்டாளர் அருகிலிருந்த மிளகாய்ச் சாந்துத் தொழிற்சாலையில் இருந்து உணவு நிறமூட்டி கசிந்ததால் மழைவெள்ளத்தின் நிறம் மாறியதாகத் தெரிவித்திருந்தார்.

வேறு சிலர் "பாத்திக்" சாயத்தால் நீரின் நிறம் சிவப்பாய் மாறியிருக்கலாம் என்று பதிவில் குறிப்பிட்டிருந்தனர்.

seithi



 Ai SONGS

 





Post a Comment

0 Comments