
சற்று நேரத்தில் ராஜகுமாரி அழகிய உடையோடு காட்சி கொடுக்கவே மருத்துவர் குமரனும் தன்நிலை மறந்து தான் போனார்
"தோழியரே,தாங்கள் அரசியை அவரோடு நீங்கள் விளையாடி மகிழ்ந்திடும் பூங்கா அந்தப்புரம் பொன் ஊஞ்சல் இருக்கும் இடம் இப்படி அவர் விரும்பி விளையாடும் விளையாட்டுக்கள் பாடல்கள் அதிகம் தன்னோடு வைத்துக்கொள்ள ஆசைப் படும் பிற தோழியர் இப்படியான அனைத்தையும் அவரோடு இணைந்து நிகழ்த்துங்கள்.நான் சற்று தூரமாய் நின்று கவனிக்க வேண்டும் ராஜகுமாரியின் மாற்ற நிலை அறிந்திடவே. என்னோடு நீங்கள் இருவரும் வந்து அருகே அமருங்கள்" என்று காவலர்களிடம் கூறினான் .
"ஆகட்டும் மருத்துவரே வருகிறோம்" என்றான் காவலன் விசு.
சாந்தி சுமதி இருவரும் ராஜகுமாரியை அழைத்துக் கொண்டு சிறு தூரம் நடந்ததும் தோழியர் அழைப்பு மணியின் ஓசையைக் கொடுத்தனர்.
ஓசை கேட்டதும் பத்துப் பேருக்கு மேல் வண்ண உடையோடு மின்னும் பொம்மையாக வந்து ராஜகுமாரிக்கு "வந்தனம் அரசியே" எனப் புன்னகையோடு கூறினர்.
அப்போது ராஜகுமாரி மெதுவாய் நடந்து சென்று பூவதியின் கரங்களைப் பிடித்தார். எல்லோருக்கும் ஆச்சரியம். காரணம் பூவதி தான் ராஜகுமாரியோடு மனம் கவர்ந்த தோழி. பல விடையங்களை அவளோடு மாத்திரமே பகிர்ந்து கொள்வார். தன்னோட மெத்தையிலே உறங்கிட இடமும் கொடுத்திடுவார் .
அன்று போல் இன்றும் தன்னோட. கை பிடியில் பூவதியையே இணைத்தார். இதை ஏனைய தோழிகள் மருத்துவருக்கு விளக்கம் கொடுத்தனர்.
" ஓ அப்படியா சரி கவனியுங்கள் முன் மாதிரி எவையெல்லாம் செய்கின்றாரோ அதனை உடனுக்குடன் என்னிடம் கூறுங்கள்" என்றான் மருத்துவர் குமரன்.
(தொடரும்)

.gif)



0 Comments