Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-71


360. வினா ஆக்கமும் கேடும் வருவது எதனால்? 
விடை: நாம் பேசும் சொற்களால்
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.(642)

361.வினா :சிறப்பான பேச்சு எது?
விடை: விரும்பாதவரும் மகிழும்படி பேசுவது 
கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்.(643)
 
362.வினா :ஒரு சொல்லை எவ்வாறு சொல்ல வேண்டும்?
விடை: குற்றமற்ற, திறன் மிக்க சொல் வெல்லும்படி சொலல் வேண்டும்
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.(645)

363.வினா: சொல்லின் முறைமை என்பது எது?
விடை : மாற்று கருத்து இல்லா வண்ணம் குற்றமற திறனுடன் பேசுவது
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.(645)

364. வினா: யாரை இகல் வெல்லல் அரிது?
விடை : திறமையான சொல்லுடன் சோம்பல் அச்சம் இல்லாதவனை வெல்வது அரிது
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்  அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது.(647)

(தொடரும்)

 



Post a Comment

0 Comments