
சிரியா நாட்டின் இறையாண்மை, பொது அமைதியைக் கெடுக்கும் விதமாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று ஐக்கிய நாட்டு சபையின் பொது செயலாளர் அந்தோனியோ குத்தெரெஸ் கண்டனம் தெரிவித்தார்.
இஸ்ரேல் படையினர் அதிகளவில் வான்வழி தாக்குதல்களை நடத்தி சிரியா மக்களை அச்சத்தில் வைத்துள்ளனர்.
இந்நிலையில் சிரியா-இஸ்ரேல் இடையில் செய்துக்கொள்ளப்பட்ட 1974ஆம் ஆண்டுக்கான எல்லை பாதுகாப்பு உடன்படிக்கை இன்னும் அமலில் உள்ளதாகவும் இதனை கருத்தில் கொண்டு இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுகொண்டார்.
சிரியாவில் 24 ஆண்டுகால அல்-அசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆக, அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம் நடைபெறுவதையே அனைத்து நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன என்று அவர் சொன்னார்
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |
| HOME


0 Comments