
ஓட்டுனர்!

(துளிப்பா)
நான்கு வழிச்சாலை
வேகம் நூற்றியிருபது;
வீட்டுவறுமையின் வேகம்
இருபதிலும் திணருவார் ஓட்டுனர்:
தேரோட்டம்!

மாற்றமில் தேரோட்டம் மாண்பு:
(இன்னிசை வெண்பா)
சீர்தரல் போலே சிறந்திடும் காட்சியால்
ஊர்வலம் தன்னில் உறைந்திடும் உள்ளங்கள்
ஊரோடும் ஒன்ற உயரும் இறையென்று
தேரோட்டம் காண்போம் தெளிந்து:
நீண்ட வடத்தை நிறைத்திடும் கைகளே
யாண்டும் விழைந்து எழில்சேர்க்க முந்திடுமே
காட்சியால் எங்கும் கலைகள் நிறைந்திருக்கும்
மாட்சிமை ஓங்கும் மலர்ந்து:
வேடிக்கை காட்டும் விதவித மாய்த்தோற்றம்
கூடிடும் பொய்க்கால் குதிரைகள் ஆட்டமே
நாடகக் கூத்து நலந்தரும் இன்னிசை
பாடலைக் கேட்டுப் பருகு:
தொன்மைத் தமிழர் தொடங்கிய தேரோட்டம்
அன்புடன் ஓங்குமோர் அற்புதந் தானென்றும்
ஆன்மிகப் பாதை அறிவியல் கண்டிருந்து
மேன்மையைச் சேர்க்கும் மிகுந்து:
சிற்பங்கள் நூறு சிரித்திடும் தேரிலே
பொற்பெனத் தெய்வம் பொலிந்திடும் தோற்றமது
ஏற்புடை உள்ளம் இனிமையில் துள்ளிடும்
மாற்றமில்"
தேரோட்டம்" மாண்பு:
(தொடரும்)

.gif)



0 Comments