
ஜப்பானில் மேனிக்வைன் பொம்மைகளை மக்கள் கிராமத்தில் வைப்பதற்கான காரணம் தெரியுமா?. அதுப்பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஜப்பானிய கிராமமான இச்சினோனோவில், தனிமையை நிவர்த்தி செய்ய ஒரு ஆக்கப்பூர்வமான அணுகுமுறை பயன்படுத்தப்படுகிறது. 60க்கும் குறைவான குடியிருப்பாளர்கள், பெரும்பாலும் வயதானவர்கள், கிராமத்தைவிட்டு சென்றவர்களின் இடைவெளிகளை நிரப்ப மேனிக்வைன்கள் பயன்படுத்தப்பட்டது. பல இளைஞர்கள் நகரங்களில் வாய்ப்புகளுக்காக இச்சினோனோவை விட்டு வெளியேறினர். இதனால், உள்ளூர்வாசிகள் பழைய உடைகள், துணிகள் மற்றும் மேனிக்வின்களால் பொம்மைகளை உருவாக்கத் தொடங்கினர்.
இந்த யதார்த்தமான பொம்மைகள் தற்போது இச்சினோனோவைச் சுற்றி சிதறிக்கிடக்கின்றன. குழந்தைகள் விளையாடுவது போன்றும், பெரியவர்கள் அன்றாடப் பணிகளைச் செய்வதை போன்றும் அந்த மேனிக்வைன் பொம்மைகள் சித்தரிக்கின்றன. பொதுவாக இது வெற்று இடங்களை நிரப்புகின்றன. இந்த போக்கை முறியடிக்கும் வகையில், இளம் ஜோடியான ரை மற்றும் டோஷிகி கட்டோ, சமீபத்தில் ஒசாகாவிலிருந்து இச்சினோனோவிற்கு தங்கள் இரண்டு வயது மகன் குரானோசுகேவுடன் குடிபெயர்ந்தனர். இது அந்த சமூகத்திற்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது.
ஜப்பானில் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 2023ஆம் ஆண்டில், ஜப்பானில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் சுமார் 36.25 மில்லியன் மக்கள் உள்ளனர். இது மக்கள் தொகையில் 29.3% ஆகும். மேலும், பிறப்பு விகிதங்களும் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன. கடந்த ஆண்டு 730,000 குழந்தைகள் புதிதாகப் பிறந்த நிலையில், இறப்புகள் 1.58 மில்லியனாக உயர்ந்தன. இந்த மக்கள் தொகை சவால் பல வளர்ந்த நாடுகளுக்கு கவலை அளிக்கிறது. ஜப்பான் உலகின் பழமையான மக்கள் தொகையில் ஒன்றாக உள்ளது.
news18

.gif)



0 Comments