Ticker

6/recent/ticker-posts

கிரேட் பிளேயரான அவருக்கு எதிரா நானும் விளையாடுனேன்னு என் பேரன்கிட்ட சொல்வேன்.. ஹெட் பாராட்டு


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா இரண்டாவது போட்டியில் விளையாடத் தயாராகி வருகிறது. முன்னதாக பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் பேட்டிங்கில் விராட் கோலி 100*, கே.எல். ராகுல் 77, ஜெய்ஸ்வால் 161 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

அவர்களை விட முதல் இன்னிங்சில் 150க்கு ஆல் அவுட்டான இந்தியா ஆரம்பத்திலேயே தடுமாறியது. அப்போது கேப்டனாக அபாரமாக பந்து வீசிய ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்து ஆஸ்திரேலியாவை 104க்கு சுருட்டி இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதனால் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராகவும் முன்னேறி அவர் சாதனை படைத்துள்ளார்.

வித்தியாசமான பவுலிங் ஆக்சன் மற்றும் துல்லியமாக பந்து வீசும் அவரை எதிர்கொள்ள எதிரணி பேட்ஸ்மேன்கள் தடுமாறுகிறார்கள். இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா வரலாற்றின் மகத்தான பவுலர்களில் ஒருவராக வருவார் என்று ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். அவரை தாமும் எதிர்கொண்டேன் என்று தம்முடைய பேரக்குழந்தைகளிடம் பெருமையாக தெரிவிப்பேன் என்றும் ஹெட் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ரா நம் விளையாட்டில் விளையாடிய மகத்தான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக செல்வார். அதை நாம் தற்போது கண்டறிந்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன். அந்தளவுக்கு அவர் எதிர்கொள்வதற்கு சவாலாக இருக்கிறார். அவருக்கு எதிராக விளையாடுவது நன்றாக இருக்கிறது”

“உங்கள் கேரியரின் பிந்தைய நாட்களில் சென்று தற்போதைய காலங்களை திரும்பிப் பார்க்கும் போது நீங்கள் பும்ராவை எதிர்கொண்டீர்கள் என்று உங்களுடைய பேரக்குழந்திகளிடம் சொல்வது நன்றாக இருக்கும். எனவே இந்த தொடரில் அவரை எதிர்கொள்வது மோசமாக இருக்காது. மிகுந்த சவாலை கொடுக்கக் கூடிய அவரை இன்னும் சில முறை எதிர்கொள்வேன் என்று நம்புகிறேன்”

“அவருக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும் என்ற ஆலோசனைகளை எங்களுடைய பேட்ஸ்மேன்கள் சொல்ல மாட்டார்கள். அதைப் பற்றி நாங்கள் அடுத்த சில நாட்களில் பேசுவோம். பும்ரா மற்ற பவுலர்களை காட்டிலும் தனித்துவமாக இருக்கிறார். எனவே அவரை எதிர்கொள்வதற்கு ஒவ்வொரு பேட்ஸ்மேனும் தங்களுடைய வழியை கண்டறிய வேண்டும்” என்று கூறினார். இதை அடுத்து இரண்டாவது போட்டி அடிலெய்ட் நகரில் பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

crictamil



 Ai SONGS

 



Post a Comment

0 Comments