Ticker

6/recent/ticker-posts

Ad Code



பட்டினித் துயரில் நைஜீரியா


கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்த வாரம் நைஜீரியாவின் பல்வேறு நகரங்களில் உணவு வழங்கும் நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 67க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஓயோ மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 35 குழந்தைகள் வரை கொல்லப்பட்டனர். சனிக்கிழமையன்று, தென்கிழக்கு அனம்ப்ரா மாநிலத்தில் 22 பேர் இறந்தனர், தலைநகர் அபுஜாவில் 10 பேர் இறந்தனர், அபுஜாவில் தேவாலயத்தில் வைத்து வழங்கப்பட்ட உடைகள் மற்றும் உணவைப் பெற 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர்.

இந்த சம்பங்கள் குறித்த முழுமையான விசாரணைக்கு நைஜீரிய அரசு உத்தரவிட்டுள்ளது.

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜனாதிபதி போலா டினுபு, வரவிருக்கும் அனைத்து கொண்டாட்டங்களையும் ரத்து செய்துள்ளார்.

இந்த துயரங்களுக்கு நாட்டில் நிலவும் அதிகப்படியான வறுமை, அதிக உணவு விலைகள் மற்றும் அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளே காரணம் என்று தொழிலாளர் கட்சித் தலைவர் பீட்டர் ஓபி குற்றம் சாட்டியுள்ளார்.

itnnews




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments