பொதுவாகவே எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய பச்சை மிளகாயில் விட்டமின் சி சத்துக்கள் செறிந்து காணப்படுகின்றது.
இது உடலில் நோய்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரிதும் துணைப்புரிகின்றது. மேலும் பச்சை மிளகாயில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு சத்து அதிகம் இருப்பதால் சீரான இதய துடிப்பிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது.
பச்சை மிளகாயில் இருக்கும் விட்டமின் சி இரும்பு சத்தை உடல் உறிஞ்சுவதங்கு துணைப்புரிகின்றது.
இவ்வளவு ஆரோக்கிய பயன்களை கொடுக்கும் பச்சை மிளகாயை வைத்து ஆந்திரா பாணியில் அருமையான சுவையில் எவ்வாறு சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
பச்சை மிளகாய் - 250 கிராம்
பல் பூண்டு - 8 முதல் 10
சீரகம் -1 தே.கரண்டி
மஞ்சள் -1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
ஆப்பிள் சைடர் வினிகர் - 1 தே.கரண்டி
எண்ணெய்- தேவையான அளவு
தேங்காய் அல்லது நிலக்கடலை - 2 தே.கரண்டி
செய்முறை
முதலில் பச்சை மிளகாயைக் கழுவி கத்தியால் கீறி விட்டு சிறிது நேரம் காயவிட வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி, காய வைத்த மிளகாயை போட்டு, நிறம் மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் சூடான பாத்திரத்தில் பூண்டு, சீரகம், மஞ்சள் சேர்த்து நன்றாக வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து கூடுதல் சுவையை பெற தேங்காய் மற்றும் வேர்க்கடலையை சேர்த்து பொன்னிறமாக, வறுத்து பச்சை மிளகாயுடன் சேர்த்து குளிரவிட வேண்டும்.
பின்னர் ஒரு மிக்சி ஜாரில் பச்சை மிளகாய், உப்பு, வினிகர் மற்றும் கடாயில் மீதமுள்ள எண்ணெய்யை மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கொரகொரப்பான பதத்தில் அரைத்து எடுத்தால் அவ்வளவு தான் அருமையான சுவையில் ஆர்திரா பச்சை மிளகாய் சட்னி தயார்.
ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை கூட கெட்டுப்போகாமல் வைத்திருக்க முடியும். சாதம், ரொட்டி, இட்லி , தோசை என அனைத்துக்கும் சூப்பாராக பொருந்தும்.
manithan
0 Comments