இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் நேற்று புதுடெல்லியில் வெளியிட்ட கூட்டறிக்கை வரவேற்கத்தக்கது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ரணில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று புதுடில்லியில் வெளியிட்ட கூட்டறிக்கை வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும், ஏனெனில் இது இந்திய-இலங்கை ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தி வலுப்படுத்துகிறது.
பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை மற்றும் திருகோணமலையை பிராந்திய ஆற்றல் மற்றும் கைத்தொழில் கேந்திர நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை நான் பாராட்டுகின்றேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்
tamilmirror
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments