இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் இன்று பிரதமர் மோடியை அதிபர் அநுர குமார திசாநாயக்க சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில், வர்த்தகம், முதலீடு, இணைப்பு மற்றும் எரிசக்தி,வீட்டுவசதி, விவசாயம், பால் மற்றும் மீன்பிடி போன்ற துறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், ”தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. மீன்பிடி படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்வதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
இந்தியா வருகை தந்துள்ள இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயகேவிடம் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் போது, மீனவர்கள் பிரச்சனையையும், தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுவிப்பது குறித்தும் கவனத்தில்கொண்டு ஒன்றிய அரசு விவாதிக்க வேண்டும்" என வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், மீனவர்கள் விடுதலை இருநாடு உறவுகளை மேம்பட உதவும் என இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகேவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடியும் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகேவும் சந்தித்து பேசியிருப்பது வரவேற்கத்தக்கது.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், கடற்படையால் பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகளையும் விடுவிக்க வேண்டும்.இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிப்பது இருநாடுகள் இடையே உறவுகள் மேம்பட உதவும்.” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
kalaignarseithigal
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments