Ticker

6/recent/ticker-posts

Ad Code



இந்தியாவுக்கு எதிரான அமைப்புகளுக்கு அமெரிக்கா நிதி உதவி: பாஜக குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு


பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் கெளதம் அதானியை குறிவைத்து நடத்தப்படும் விமர்சனங்களுக்கு பின்னணியிலுள்ள அமைப்புகளுக்கு அமெரிக்கா நிதியளிப்பதாக பாஜக சுமத்திய குற்றச்சாட்டியது. இதை அமெரிக்கா வன்மையாக கண்டித்துள்ளதோடு மறுத்துள்ளது.

அதானி குழுமம் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சர்வதேச புலனாய்வு பத்திரிகை அமைப்பான  OCCRP  அறிக்கையைச் சுட்டிக்காட்டி பாஜக மீது கடும் விமர்சனங்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்தார்.  இந்த அமைப்புக்கு அமெரிக்கா நிதியுதவி அளிப்பதாக பாஜக குற்றம்சாட்டியது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, பாஜகவின் குற்றச்சாட்டுகள் ஏமாற்றமளிக்கின்றன.

சர்வதேச அளவில் பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி அளிக்க பல்வேறு அமைப்புகளுடன் அமெரிக்க அரசு பணியாற்றி வருகிறது. உலகெங்கிலும் ஊடக  சுதந்திரத்துக்கான உரிமைகளை அமெரிக்க அரசு எப்போதும் வலியுறுத்தி வருகிறது.

மக்களுக்கு உரிய தகவல்களை வழங்கி, ஆக்கபூர்வ விவாதங்களை உருவாக்கி, ஆட்சியில் இருப்பவர்களை பொறுப்பு உணர வைக்கும் சுதந்திரமான ஊடகம் ஜனநாயகத்தின் இன்றியமையாத அங்கமாகும் என்று தெரிவித்துள்ளது. பாஜக பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது என்று அமேரிக்கா குற்றம் சாட்டியுள்ளது 

nambikkai



 Ai SONGS

 



Post a Comment

0 Comments