Ticker

6/recent/ticker-posts

"மரணம் நெருங்கியது போல் இருந்தது" - அஸர்பைஜான் விமான விபத்தில் உயிர்பிழைத்த பயணி


"வெடிப்புச் சத்தம் கேட்டது"

"மரணம் நெருங்கிக்கொண்டிருந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது"

அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான விபத்தில் உயிர்பிழைத்தவர்களில் சிலர் தங்களது அனுபவங்களை Reuters செய்தி நிறுவனத்துடன் பகிர்ந்துகொண்டனர்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சுபோன்குல் ராக்கிமோவும் (Subhonkul Rakhimov) அவர்களில் ஒருவர்.

"வெடிப்புச் சத்தம் கேட்டதும் விமானம் நொறுங்கிவிடும் என்று நினைத்தேன். உடனடியாகப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன். முடிவு நெருங்கிக்கொண்டிருந்தது போல் தோன்றியது," என்றார் அவர்.

விபத்தில் உயிர்பிழைத்த இன்னொரு பயணி வாஃபா ஷாபானோவா (Vafa Shabanova) வெடிப்புச் சத்தம் பயத்தை ஏற்படுத்தியதாக Reuters செய்தியிடம் கூறியிருந்தார்.

பனியின் காரணமாக விமானம் ரஷ்யாவின் Grozny நகரில் தரையிறங்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அந்நேரம் வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் விமான ஊழியர் சுல்ஃபுகார் அசாடோவ் (Zulfugar Asadov) தெரிவித்தார்.

சென்ற புதன்கிழமை விபத்துக்குள்ளான விமானத்தில் 67 பேர் பயணம் மேற்கொண்டனர். அவர்களில் 38 பேர் மாண்டனர். 29 பேர் உயிர்பிழைத்தனர்.

seithi





 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments