Ticker

6/recent/ticker-posts

இதிலும் மோசடியா? : என்ன அண்ணாமலை ஜி இப்படி பன்றீங்க...


தமிழ்நாட்டில் பா.ஜ.கவை ஒரு உயர்ந்த இடத்திற்கு அண்ணாமலை கொண்டு சொல்வார் என நினைத்து, ஐபிஎஸ் அதிகாரியான அவரை பா.ஜ.க தலைவராக அமரவைத்தது டெல்லி மேலிடம். ஆனால் இவர்கள் நினைத்தது ஒன்றுக் கூட நிறைவேறவில்லை.

’அண்ணாமலை வாயை திறந்தாலே பொய் மட்டும்தான் வெளியே வருகிறது’ என எதிர்க்கட்சி தலைவர்கள் கூறுவதைக் காட்டிலும் பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவர்களே கூறும் அளவிற்கு ’நா கூசாமல்’ பொய்களை கட்டவிழ்த்து வருகிறார்.

ரஃபேல் வாட்ச் விவகாரத்தில் அண்ணாமலையின் அந்த கம்பீர தோற்றம் தவிடுபொடியானது. ”நீங்க உண்மையே பேசமாட்டிங்களா? " என சாமனிய மக்களே கேள்வி எழுப்பிபும் அளவிற்கு அவரது முகத்திரை கழிந்தது.

தற்போது அண்ணாமலை புது அவதாரம் ஒன்று எடுத்துள்ளார். அது என்னவென்றால், தி.மு.க ஆட்சியை அகற்றும் வரை நான் காலணிகள் அணிய மாட்டேன், 48 நாள் விரதம் இருப்பதாக கூறி இன்று சாட்டையால் 8 முறை தன்னைத்தானே அடித்துக் கொண்டு, ஒரு தேர்தல் அரசியல்வாதியாக நடந்து கொள்வதற்கு பதில் அரசியல் கோமாளியாக மாறி இருக்கிறார் அண்ணாமலை.

இந்த கோமாளித்தனத்தில் கூட அவர் உண்மையாக நடந்து கொள்ளவில்லை. இவரது ஆதரவலாளர்கள், சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டம் அறிவித்த உடனே தேங்காய் நாரால் பின்னப்பட்ட சாட்டையை தயார் படுத்து அவரிடம் கொடுத்துள்ளனர்.

'ஏன் டா நான் ஒரு பேச்சுக்கு சொன்னா நிஜமான சாட்டையா எடுத்துட்டு வருவிங்க' என இவரது முகத்தில் தெரிந்த பீதியை அறிந்த பாசக்கார தொண்டர்கள் உடனே, அவரது முதுகு பழுத்துவிடக் கூடாது என்பதற்காக பருத்தியால் செய்யப்பட்ட சாட்டையை பிறகு கொடுத்துள்ளனர்.

பாகுபளிபோல் தன்னை மனதில் நினைத்துக் கொண்ட அண்ணாமலை 8 முறை சாட்டையால் அடித்துக் கொண்டார். இவரது தொண்டர்களும் இவருக்கு ஈடாக கண்ணீர் விட்டு அழுதனர். இந்த கோமாளி கூத்தை வேறு செய்தியார்களை வரவைத்து செய்துள்ளார் என்பதுதான் மிகவும் அண்ணாமலையின் சிறப்பான செயல்.

kalaignarseithigal





 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments