உள்ளம் கொள்ளை
போகுதே கண்ணாலே
உறி அடிக்கிறதே
மனமும் உன்னாலே
உளியாய் நினைவும்
உருவமாக்கிறதே தன்னாலே
உல்லாச ஆசைகளும்
துள்ளுகின்றது இதயத்திலே
உம்மேல காதல் வந்த
சந்தோசத்திலே
உண்ணும் உணவும்
கசப்பாகின்றது நாவினிலே
உதாசீனம் செய்யாதே
காவேரியோ விழிகளிலே
உற்சாகம் இழந்த
நெஞ்சமும் சோகத்திலே
உத்தரவு தந்துவிடு
தொந்தரவு பண்ணாமலே
உனக்காக நானும்தான்
காத்திருப்பேன்
அந்திமாலையிலே
ஆர் எஸ் கலா
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments