Ticker

6/recent/ticker-posts

Ad Code



இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா. வாக்கெடுப்பு: இந்தியா ஆதரவு

1967ம் ஆண்டு முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்ற ஐ.நா.வின் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.

செனகல் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தது. பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதியான தீர்வு என்ற வரைவுத் தீர்மானத்துக்கு 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.வில், இந்தியா உள்பட 157 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட 8 நாடுகள் எதிராக வாக்களித்தன. 7 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

இந்த தீர்மானத்தில், கிழக்கு ஜெருசலேம் உள்பட 1967ம் ஆண்டு முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும்; சர்வதேச சட்டத்திற்கு இணங்க, ராணுவ தாக்குதல்கள், பயங்கரவாத செயல்கள் உள்ளிட்ட வன்முறைகளை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும்;

1967ஆம் ஆண்டுக்கு முந்தைய இரு நாட்டின் எல்லைகளுக்குள், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் இரு தனி நாடு தீர்வு; சுதந்திர அரசை பாலஸ்தீனத்தில் நிறுவுதல் போன்ற பாலஸ்தீன மக்களின் உரிமைகளை மீட்டெடுத்தல் ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் சிரியாவின் கோலான் பகுதியில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்திற்கும் இந்தியா ஆதரவாக வாக்களித்தது. இந்த தீர்மானத்துக்கு 97 நாடுகள் ஆதரவாகவும், 8 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 64 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

nambikkai



 Ai SONGS

 



Post a Comment

0 Comments