Ticker

6/recent/ticker-posts

Ad Code



”விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு” : ஒன்றிய பா.ஜ.க அரசு அராஜகம்!


வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி "டெல்லிக்கு செல்வோம்" போராட்டத்தை பஞ்சாப் - அரியானா உள்ளிட்ட மாநிலங்களை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

சம்யுக்தா கிசான் மோட்சா, கிசான் மஸ்தூர் மோட்சா ஆகிய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் டிராக்டர்களில் சம்பு எல்லையில் குவிந்துள்ளனர். டெல்லியில் விவசாயிகள் நுழைவதை தடுக்க தடுப்புகளை அமைக்கப்பட்டு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

நொய்டாவைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். டெல்லிக்கு நுழைவதற்கு முன்பாகவே தடுத்து நிறுத்தும் நோக்கில் விவசாயிகளை குண்டுக்கட்டாக காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.

மேலும் தடுப்புகளை மீறி நுழையும் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி போலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், விவசாயிகள் பலருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் தொடர் கோரிக்கை நிறைவேற்றாமல் ஒன்றிய பா.ஜ.க அரசு அவர்கள் மீது தாக்குல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

kalaignarseithigal



 Ai SONGS

 



Post a Comment

0 Comments