Ticker

6/recent/ticker-posts

Ad Code



இந்திய ரசிகரை குண்டுக் கட்டாக தூக்கி வெளியேற்றிய ஆஸ்திரேலிய காவலர்கள்.. என்ன நடந்தது?


அடிலெய்டு: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஆடி வரும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய ரசிகர் ஒருவரை மைதான பாதுகாவலர்கள் குண்டுகட்டாக இழுத்துச் சென்ற காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி உள்ளன. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை இரண்டு போட்டிகளில் இந்திய அணி விளையாடி உள்ளது.

முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி அடிலெய்டு மைதானத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்தது. அந்த போட்டியில் இந்திய அணி மோசமாக ஆடி வந்த நிலையில், ஆஸ்திரேலிய ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். அப்போது அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திய ரசிகர் ஒருவர் உப்புத் தாளை (Sand Paper) எடுத்து காண்பித்தார். அதன் மூலம் ஆஸ்திரேலிய அணி ஏமாற்றும் அணி என்ற செய்தியை அவர் சொல்ல முயன்றார்.

2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் கேமரான் பான்கிராப்ட் உப்புத் தாளை வைத்து பந்தை சேதப்படுத்திய விவகாரம் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. அதற்காக அப்போதைய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. 

அந்த விவகாரத்தை நினைவுபடுத்தும் வகையில் இந்திய ரசிகர் உப்புத் தாளை காண்பித்து, "ஆஸ்திரேலிய அணி, ஏமாற்று வேலை செய்யும் அணி" என்ற கருத்தை கூறினார். அதனால் மைதானத்தில் இருந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் அவருக்கு எதிராக பேசினர். நிலைமை மோசமாவதை உணர்ந்த மைதான பாதுகாவலர்கள் அந்த இந்திய ரசிகரை அங்கிருந்து இழுத்துச் சென்றனர்.

அவர்கள் இழுத்துச் செல்லும்போதும் அந்த இந்திய ரசிகர், ஆஸ்திரேலிய ரசிகர்களிடம் உப்புத் தாளை காண்பித்து கூச்சலிட்டபடியே சென்றார். அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 337 ரன்கள் எடுத்தது. 

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 175 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதை அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு 19 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி அந்த சிறிய இலக்கை எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

mykhel



 Ai SONGS

 



Post a Comment

0 Comments