மனித இனத்தின் தோற்றத்தின் பின் உலகில் முதலாவது உருவான நகரமாக 'உருக்' கொள்ளப்படுகின்றது.
கி.மு. 6,500 - 4,000 செழித்ததாக கருதப்படும் பழமையான சுமேரியன் நகரமான இதனை இனம் காணலாம். பாபிலோனிய இராச்சியத்தின் எழுச்சிவரை இந்நாகரிகம் செழித்தோங்கியிருந்தது.
சுமேரியா உலகில் தோன்றிய நாகரிகங்களில் அதற்கு வேண்டிய சகல கூறுகளையும் கொண்ட முதலாவது நாகரிகமாக கருதப்படுகிறது. "சுமேரியர்" என்ற சொல் சுமேரிய மொழி பேசியவர்களை குறிக்கிறது.
யூப்பிரட்டீஸ், டைகிரிசு நதிகளுக்கிடைப்பட்ட பகுதி மெசொப்பொத்தேமியா, சுமேரியா, பாபிலோனியா என்றெல்லாம் அறியப்பட்ட இந்நாடு இன்றைய ஈராக்கின் தென் பகுதியில் அமைந்திருந்ததாகக் கூறப்படுகின்றது.
இதன் தலைநகராக விளங்கிய பிரதான நகரமாகிய 'உருக்'கை அராபியர்கள் 'வர்க்கா' என்று அழைத்தனர். வேதாகமத்தில் 'எரேக்' என்று அழைக்கப்பட்டிருக்கின்றது. 'உருக்' எனும் வார்த்தையே பிற்காலத்தில் 'ஈராக்'காகத் திரிபு பெற்றுள்ளது.
1849ல் தொல்லியல் நிபுணர் வில்லியம் லாஃப்ட்ஸ் என்பவரால் இந்நகரம் கண்டுபிடிக்கப்பட்டு, ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. இந்த அசாதாரணமான தளமானது இன்று நகர நாகரிகத்தின் விடியலை உலகிற்கு வழங்குகிறது
வரலாற்றாசிரியர்கள் 'உருக்' நகரை உலகின் முதல் நகரம் என்று அழைப்பதோடு, மனித இனத்தின் மூல ரகசியங்கள் அங்கே மறைக்கப்பட்டிருக்கலாம் என்றும் முதல் உயிரினங்கள் இறங்கிய இடமாக இருக்கலாம் என்றும் குறிப்பிடுகின்றார்கள்.
செம்மைத்துளியான்
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments