
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெனிசுலா மீது அமெரிக்கப் படைகள் இன்று மிகப் பெரிய தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்திய பின்னர் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்
வெனிசுவெலா அதிபர் நிக்கோலஸ் மடுரோ (Nicolas Maduro) அவரது மனைவி இருவரையும் பிடித்து நாட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டதாய் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
பெரியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில், மடுரோவும், அவரின் மனைவியும் பிடிபட்டதாய் டிரம்ப் சமூக ஊடகத்தில் தெரிவித்தார்.
இதற்கு முன்னர், வெனிசுவெலாவின் பல இடங்களில் பெரும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வெனிசுவெலா அதிபர் அவசரநிலையை அறிவித்திருந்தார்.
அமெரிக்காவின் ராணுவத் தலையீட்டை அவர் கண்டித்தார்.
நேற்று இரவு இரண்டு மணியளவில் கரகஸில் குறைந்தது 7 முறை வெடிப்புகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
கொலம்பியாவில் அலர்ட்:
அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து வெனிசுலா எல்லையில் தங்கள் நாட்டு படைகள் நிறுத்தப்பட்டதாக கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்தார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த பெட்ரோ, “இப்போது வெனிசுலா எல்லையில் ராணுவப் படைகளை நிறுத்த உத்தரவிட்டுள்ளேன். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை லத்தீன் அமெரிக்காவின் இறையாண்மை மீதான தாக்குதல். இவை ஒரு மனிதாபிமான நெருக்கடியில் முடிவடையும்” என்று கூறினார்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments