Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஆளுநர் ட்ரூடோ... கனடாவையும் பிரதமரையும் மிக மோசமாக கிண்டலடித்த டொனால்டு ட்ரம்ப்


டொனால்டு ட்ரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தல் தீவிரமடைந்து வரும் நிலையில், சமூக ஊடக பக்கத்தில் கனடா ஆளுநர் என பிரதமர் ட்ரூடோவை டொனால்டு ட்ரம்ப் கிண்டலடித்துள்ளார்.

தற்போதும் எடுக்க தயாராக

டொனால்டு ட்ரம்பின் வரி விதிப்புக்கு கனடா பதிலடி அளிக்கும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ள நிலையிலேயே டொனால்டு ட்ரம்ப் கிண்டலடித்துள்ளார்.

8 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் என்ன முடிவெடுத்தோமோ, அப்படியான ஒரு முடிவை தற்போதும் எடுக்க தயாராக இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போதைய சூழலில் வரி விதிப்பு என்பது சவாலானதும் பொருளாதார ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் ட்ரூடோ ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும் அச்சம் கொள்ள தேவையில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டொனால்டு ட்ரம்பின் முதல் ஆட்சி காலத்திலும் இப்படியான வரி விதிப்பு நெருக்கடியை உருவாக்கியிருந்தார். கனேடிய எஃகு பொருட்கள் மீது 25 சதவீதமும், கனேடிய அலுமினியம் மீது 10 சதவீதமும் வரி விதித்திருந்தார்.

இதற்குப் பதிலடியாக, அமெரிக்க எஃகு மற்றும் அலுமினியப் பொருட்களின் மீது 25 சதவீத வரியை கனடா விதித்தது. மேலும் காபி, தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் மேப்பிள் சிரப் உள்ளிட்ட பல்வேறு அமெரிக்கப் பொருட்களுக்கு 10 சதவீத கூடுதல் வரியும் விதிக்கப்பட்டது.

அமெரிக்க மாகாணம்

ஓராண்டு நீடித்த இந்த வரிப்போர் கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே ஒரு ஒப்பந்தத்தை எட்டிய பின்னர் 2019 ல் மொத்தமாக நீக்கப்பட்டன. ஆகஸ்ட் 2020 ல் கனடிய அலுமினியத்தின் மீது 10 சதவீத வரியை விதிக்கும் திட்டத்தை ட்ரம்ப் மீண்டும் அறிவித்தார்.

ஆனால் பின்னர் அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு இடையே குறித்த திட்டம் இடைநிறுத்தப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் வரி விதிப்பு விவகாரம் தொடர்பில் ட்ரம்புடன் கலந்தாலோசிக்கும் பொருட்டு ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்கா சென்றிருந்தார்.

அந்த சந்திப்புக்கு பின்னர் முதல் முறையாக கனடாவை அமெரிக்க மாகாணம் எனவும் ஜஸ்டின் ட்ரூடோவை மாகாண ஆளுநர் என்றும் ட்ரம்ப் கிண்டலடித்தார். அதேப் போன்று தற்போது மீண்டும் ஆளுநர் ட்ரூடோ என ட்ரம்ப் கிண்டலடித்துள்ளார்.

lankasri



 Ai SONGS

 



Post a Comment

0 Comments