
மகாராஷ்டிரா மாநிலம், பர்பானி ரயில் நிலையம் அருகே வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையில் இருந்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரதியை சேதப்படுத்தியதால் அங்கு பெரும் கலவரம் வெடித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், பர்பானி ரயில் நிலையம் அருகே, சட்டமேதை அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையுடன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரதியும் வைக்கப்பட்டுள்ளது. நேற்று (10-ம் தேதி) அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அரசியலமைப்பு பிரதியை சேதப்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு போராட்டமும், கல்லெறி சம்பவங்களும், அதனைத் தொடர்ந்து தீவைப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன.
அரசியலமைப்பு சட்டத்தின் பிரதி சேதப்படுத்தப்பட்ட தகவல் வெளியானதும், சுமார் 200 பேர் வரை அந்த இடத்தில் குவிந்துள்ளனர். சம்பவ இடத்தில் குவிந்த அவர்கள் நேராக ரயில் நிலையம் நோக்கி பேரணியாக சென்றனர். மாலை 6 மணிக்கு ரயில் நிலையம் சென்ற அவர்கள், அங்கு இருந்த நந்திகிராம் விரைவு ரயிலின் ஓட்டுநரை தாக்கியுள்ளனர்.
ரயில் ஓட்டுநரை தாக்கியது மட்டுமின்றி, சுமார் 30 நிமிடங்கள் ரயில் பாதையை மறைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரயில்வே போலீஸார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன்பிறகு மாலை 6.50-க்கு மேல் அந்தப் பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டன.
அரசியலமைப்பு பிரதி சேதப்படுத்தப்பட்டது குறித்து வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியின் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் தனது எக்ஸ் பக்கத்தில், “பர்பானியில் சாதிவெறி கொண்ட மராத்தியக் குண்டர்களால் பாபாசாகேப் சிலையில் இருந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை சேதப்படுத்தியது முற்றிலும் வெட்கக்கேடானது.
பாபாசாகேப் சிலையையோ அல்லது தலித்களின் அடையாளத்தையோ சேதப்படுத்துவது இது முதல் முறை அல்ல.
வஞ்சித் பகுஜன் அகாடி பர்பானி மாவட்ட காரியகர்த்தாக்கள் சம்பவ இடத்திற்கு முதலில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்தே அரசியலமைப்பு பிரதியை சேதப்படுத்தியது தொடர்பாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அடுத்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யாவிட்டால், விளைவுகள் தொடரும்” என்று பதிவிட்டுள்ளார்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments