Ticker

6/recent/ticker-posts

Ad Code



நான்காவது டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்கு இதுவே காரணம் – வருத்தத்தை தெரிவித்த ரோஹித் சர்மா


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது இன்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்துடன் நிறைவுக்கு வந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணியானது 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியானது இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 234 ரன்கள் குவித்தது.

அதே வேளையில் இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 369 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் 155 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் :

உண்மையிலேயே இந்த தோல்வி எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. நாங்கள் இந்த போட்டியில் போராடும் அளவிற்கு விளையாடவில்லை என்று நினைக்கிறேன். இறுதிவரை போராட வேண்டும் என்று நினைத்தோம் ஆனால் இந்த போட்டியில் அது முடியாமல் போனது. உண்மையிலேயே கடைசி செஷனை அணுக கடினமாக இருந்தது.

ஒட்டுமொத்தமாக இந்த போட்டியில் நாங்கள் எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிட்டதால் தோல்வியை சந்தித்துள்ளோம். ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக மீண்டு வந்தது. நான் இந்த தோல்வி குறித்து நிறைய யோசிக்க வேண்டியுள்ளது.

ஒரு அணியாக நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். இந்த போட்டியில் எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தும் அதனை பிடிக்க தவறிவிட்டோம். அதுவே எங்களுக்கு தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியது குறிப்பிடத்தக்கது.

crictamil




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments