Ticker

6/recent/ticker-posts

Ad Code



அஸ்வின் ஓய்வு: மனைவி ப்ரீத்தியின் நெகிழ்ச்சியான பதிவு... வைரல்!


இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர், ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்வினின் திடீர் ஓய்வு அறிவிப்பு குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ள நிலையில், திடீரென இந்த முடிவை அவர் எடுத்தது ஏன் என்ற காரணத்தையும் ஆராய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

அஸ்வின் டிசம்பர் 18-ம்தேதி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட நிலையில், மாலையிலேயே அங்கிருந்து புறப்பட்டு அடுத்தநாள் சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வு பெற்றது குறித்து அவரது மனைவி ப்ரீத்தி உருக்கமான கடிதம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

"கடந்த இரண்டு நாட்களாக எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதை எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரருக்கான அர்ப்பணிப்பாக எழுதலாமா? அல்லது வாழ்க்கை துணை என்ற கோணத்தில் எழுதலாமா? அல்லது ஒரு ரசிகையின் காதல் கடிதமாக எழுதலாமா? என தெரியாமல் இருந்தது. எல்லாவற்றின் கலவையாக இது இருக்கும்" என நினைப்பதாக பிரித்தி நாராயணன் இன்ஸ்டாகிராம் பதிவில் எழுதியுள்ளார்...... மேலும்...

"அஸ்வினின் பத்திரிக்கையாளர் சந்திப்பை 2 நாட்கள் முன்பு பார்த்த போது நான் பல சிறிய மற்றும் பெரிய தருணங்களை யோசித்துப் பார்க்கிறேன். கடந்த 14 ஆண்டுகளில் பல நினைவுகள் உள்ளன. பெரிய வெற்றிகள், தொடர் நாயகன் விருதுகள், ஒரு ஆக்ரோஷமான போட்டிக்கு பின் அறையில் நிலவும் நிசப்தம், சில போட்டிகளுக்கு பின்னர் மாலை நேரத்தில் நீண்ட நேரம் ஒலிக்கும் குளியல் அறையின் தண்ணீர் சத்தம், தனது எண்ணங்களை ஒரு காகிதத்தில் பென்சிலால் அவர் எழுதுவது, போட்டி திட்டங்களை மேற்கொள்வதற்காக இடைவிடாமல் கிரிக்கெட் வீடியோக்களை பார்த்துக் கொண்டு இருப்பது, ஒரு போட்டிக்கு செல்லும் முன்பாக மூச்சுப் பயிற்சி செய்வது, சில பாடல்களை இடைவிடாமல் கேட்பது......

சில வெற்றிகளுக்கு பின்னர் கண்ணீர் இருந்தது.... குறிப்பாக சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டி (2013), மெல்போர்ன் கிரிக்கெட் போட்டியின் வெற்றி, சிட்னி போட்டி டிரா, காபா போட்டி வெற்றி, டி20 அணியில் மீண்டும் இடம் பிடித்தது... ஆகியவற்றை சொல்லலாம்....

 ஒரு கிரிக்கெட் வீரருக்கான பையை எப்படி எடுத்து வைக்க வேண்டும் என தெரியாமல் இருந்ததிலிருந்து, உங்களுடன் உலகின் அனைத்து கிரிக்கெட் மைதானங்களுக்கும் சென்றது வரை.. நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என நினைத்தது.. உங்களை பார்த்து கற்றுக்கொண்ட விஷயங்கள்.. இவை அனைத்தும் அற்புதமானவை....

நீங்கள் எனக்கு அறிமுகப்படுத்திய உலகம், நான் விரும்பிய விளையாட்டை மிக அருகில் இருந்து பார்க்கவும், கொண்டாடுவதற்கும் எனக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது ஆகியவற்றை மறக்க முடியாது.....

உங்களுடைய சர்வதேச கிரிக்கெட்டை நீங்கள் முடித்துக் கொண்டது பற்றி சொல்ல வேண்டும் என்றால் உங்களுடைய சுமையை இறக்கி வைப்பதற்கு இது தான் நேரம். உங்களுக்கு பிடித்தது போல வாழ்க்கையை வாழுங்கள்.....

கூடுதலாக சாப்பிடுவதற்கான இடத்தை எடுத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தினருடனும், நமது குழந்தைகளுடனும் நேரத்தை செலவிடுங்கள். புதிய பவுலிங்கை கண்டுபிடியுங்கள்."

என்று இன்ஸ்டாகிராமில் எழுதி இருக்கிறார் ப்ரீத்தி அஸ்வின். இந்த பதிவு வைரலான நிலையில் ரசிகர்கள் வாழ்த்துக்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

kalkionline




Post a Comment

0 Comments