Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம் - இஸ்ரேல்


ஈரான் ஆதரவு ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu) கூறியுள்ளார். 

நேற்று முன்தினம் (21 டிசம்பர்) டெல் அவிவ் (Tel Aviv) நகரில் ஹௌதிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 16 பேர் காயமடைந்தனர். பலர் வீடுகளை விட்டு வெளியேற நேர்ந்தது. 

உலக ஒழுங்குக்கும், கப்பல் போக்குவரத்துக்கும் ஹௌதிகள்  அச்சுறுத்தலாய் இருப்பதாகத் திரு நெட்டன்யாஹு சாடினார். 

காஸாவில் ஹமாஸுக்கு எதிரான போர் தொடங்கியதிலிருந்து ஹௌதிகள் 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், ஆளில்லா வானூர்திகளைப் பாய்ச்சியதாக இஸ்ரேல் ராணுவம் சொன்னது. 

இஸ்ரேலியர்கள் தளராமல் உறுதியாய் இருக்கும்படி திரு நெட்டன்யாஹு கேட்டுக்கொண்டார். 

வார இறுதியில் அமெரிக்க - பிரிட்டிஷ் தாக்குதலை முறியடித்ததாக ஹௌதிகள் கூறியிருக்கும் வேளையில் இஸ்ரேலியப் பிரதமர் அவ்வாறு சொன்னார். 

seithi




Post a Comment

0 Comments