தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியானது முதலில் விளையாடி 49.5 ஓவர்களில் 329 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
பின்னர் 330 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 43.1 ஓவர்களில் 248 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது தென்னாப்பிரிக்க அணி சார்பாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்றிச் கிளாஸன் அதிகபட்சமாக 74 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர் என 97 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து இருந்தார்.
அப்படி 97 ரன்களில் ஆட்டமிழக்கும்போது தான் சதம் அடிக்காமல் ஆட்டமிழந்ததையும், அணியை வெற்றிக்கு அழைத்துச்செல்ல முடியாமல் போனதையும் ஏற்றுக் கொள்ள முடியாத விரக்தியில் மைதானத்தில் உள்ள ஸ்டம்பை எட்டி உதைத்து விட்டு சென்றார்.
ஐசிசி விதிமுறைப்படி மைதானத்தில் உள்ள எந்த ஒரு பொருளையும் சேதப்படுத்துவது தவறு என்பதால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீத அபராதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளியையும் வழங்குவதாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
crictamil
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments