Ticker

6/recent/ticker-posts

Ad Code



இந்தியாவின் இளைய விமானியாக சமைரா ஹுல்லர் (Samaira Hullur) வரலாறு படைத்துள்ளார்.


கர்நாடகா - விஜயபுரத்தைச் சேர்ந்த 18 வயதான சமைரா, இந்தியாவின் இளம் விமானி என்ற பெயரை வரலாற்றில் பொறித்துள்ளார்.

அனைத்து கடுமையான சான்றிதழ் சோதனைகளுக்குப் பிறகு தனது வணிக பைலட் உரிமத்தை (CPL) பெற்றுக் கொண்டதன் மூலம், விமானத் துறையில் அவர் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைந்துள்ளார்.

சமைராவின் பயணம் அவரது ஈடிணையற்ற அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் அதிக போட்டி நிறைந்த துறையில் சிறந்து விளங்குவதற்கான உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும். 

இளம் வயதிலேயே இப்படி ஒரு அசாதாரண சாதனையை நிகழ்த்தி, நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற ஆர்வமுள்ள விமானிகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
சமைராவின் வெற்றிக் கதையானது, உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக உள்ளது; அத்துடன் விடாமுயற்சியின் சக்தி மற்றும் தடைகளை உடைக்கும் தைரியத்தை இளைய தலைமுறையினருக்கு அளிக்கின்றது.  

அவர் தனது துறையில் மேலும் மேலும்  உயர்ந்து, ​​தனது கனவுகளைத் துரத்தும் எண்ணக்கருவைத் தொடர வாழ்த்துகின்றோம்.

செம்மைத்துளியான்



 Ai SONGS

 



Post a Comment

0 Comments