
அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானத்தைத் தவறுதலாகச் சுட்டு வீழ்த்தியதை ரஷ்யா ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அஸர்பைஜான் அதிபர் இல்ஹம் அலியெவ் வலியுறுத்தியிருக்கிறார்.
தாக்குதலில் விமானம் சேதமடைந்ததாக இல்ஹம் தெரிவித்தார்.
ரஷ்யா அது குறித்துப் பொய் சொன்னதாக அவர் குறை கூறினார்.
விமான விபத்து தொடர்பில் ரஷ்யாவுக்கு அஸர்பைஜான் 3 கோரிக்கைகளை வைத்தது.
முதலில் ரஷ்யா மன்னிப்புக் கேட்கவேண்டும். இரண்டாவதாக ரஷ்யா அதன் தவற்றை ஒப்புக்கொள்ளவேண்டும்.
மூன்றாவது அந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று அதிபர் இல்ஹம் கேட்டுக் கொண்டார்.
ஏற்கனவே ரஷ்ய அதிபர் புட்டின் மன்னிப்புக் கேட்டுவிட்டார்.
அந்த விபத்து துயரமானது என்று கூறிய திரு புட்டின் அதற்குப் பொறுப்பேற்கவில்லை.
அக்தாவ் நகருக்கு அருகே சம்பவம் நடந்த இடத்தில் ரஷ்யா, அஸர்பைஜான், கஸக்ஸ்தான் ஆகிய நாடுகள் கூட்டு விசாரணை மேற்கொள்வதாக கிரெம்ளின் தெரிவித்தது.
விபத்துக்குள்ளான விமானத்தில் 67 பயணிகள் இருந்தனர். 38 பேர் மாண்டனர். 29 பேர் உயிர்பிழைத்தனர்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments