
டிக்டாக் செயலியில் பதிவு செய்யப்படும் வீடியோக்களை நிறுத்த வேண்டும் என்று 15 வயது சிறுமிக்கு அவரது குடும்பத்தினர் கூறிய நிலையில் அந்த சிறுமி நிறுத்தாததால் அவரை கௌரவக்கொலை செய்துள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில் அந்த குடும்பத்தில் உள்ள 15 வயது சிறுமி தினந்தோறும் டிக் டாக் செயலியில் வீடியோக்களை பதிவு செய்வதை வழக்கமாக இருந்துள்ளார்.
இந்த வீடியோக்களை பதிவு செய்வதை நிறுத்துமாறு அவரது தந்தை கூறிய நிலையில் சிறுமி அதனை கேட்கவில்லை. இதனை அடுத்து மனம் உடைந்த சிறுமியின் தந்தை தனது மகளை கொலை செய்ய முடிவு செய்தார்.
ஜனவரி 15ஆம் தேதி அன்று சிறுமியை வெளியே சென்று சென்ற போது அவரது தந்தையும் மாமாவும் சேர்ந்து 15 வயது சிறுமியை கௌரவ கொலை செய்தனர். இதனை அடுத்து போலீசார் விசாரணை செய்த போது வெளியில் இருந்து துப்பாக்கியால் மர்ம நபர்கள் சுட்டதாகவும் அப்போது தனது மகள் இறந்துவிட்டதாகவும் கூறினார்கள்.
ஆனால் அதன் பின்னர் விசாரணையை தீவிரப்படுத்திய போது கௌரவ கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து சிறுமியின் தந்தை மற்றும் மாமா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
webdunia

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments