
அதிகமாக பயணம் செய்ய வேண்டாம் என அறிவுரை கூறுபவர்கள் எனது கடின உழைப்பை அறியாதவர்கள்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
அதிகமாக வெளிநாட்டுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று பலர் எனக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.
ஆனால் நாட்டிற்காக முதலீடு தேடுவதற்கான எனது கடின உழைப்பை அவர்கள் அறியவில்லை.
ஒரு வர்த்தக நாடாக, மலேசியாவிற்கு அதிகமான முதலீடு தேவை.
முதலீடுகள் இல்லாமல் நாடு வேலை வாய்ப்பு தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கவோ அல்லது வேலை வாய்ப்புகளை உருவாக்கவோ முடியாது.
இதனால் நாடு அதன் மக்களின் பொருளாதார திறன்கள் அதிகரிக்கும்.
முதலீடு தான் நாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்த உதவுகிறது.
என்னை குறை கூறுபவர்களுக்கு நான் இரவில் வந்தது குறித்து தெரியாது.
ஹோட்டலுக்குச் செல்வதற்கு முன்பு இரண்டு கூட்டங்கள் இருந்தன. பின்னர் மற்றொரு சந்திப்பு. தூதர் நள்ளிரவு வரை ஆலோசனையை வழங்கினார்.
பின்னர் அதிகாலை, காலை 7 மணிக்கு ஒரு இருதரப்பு சந்திப்பு நடந்தது.
அதுதான் இப்போது வரை எனது. நான் வேலைக்காகவே பயணங்களை மேற்கொள்கிறேன்.
மாறாக கோல்ப் விளையாடுவற்காக ஒரு நாள் கூட விடுமுறை எடுத்தது இல்லை என்று பிரதமர் கூறினார்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments