Ticker

6/recent/ticker-posts

Ad Code



யுத்த நிறுத்தம்...!


பழுத்த இலைகள் 
உதிர்வது நியாயம்
பிஞ்சுப் பூக்களை 
பிச்சுப் போட்டது
எந்த விதத்தில் நியாயம்?

மாண்டு போன 
உயிர்கள் தான்
இனி மீண்டும் வருமா?

யுத்தம் இளைப்பாறுகிறதா
சோர்ந்த பின் 
அடுத்த கட்ட ஆயத்தங்கள் 
செய்ய ஓய்வெடுக்கிறதா?

நிரந்தரமாக 
நிறுத்தப்படாத வரை
"தலைக்கனம்" 
தோற்றுக் கொண்டே தானிருக்கும்.

போர்மேகங்கள் 
விலகிச் செல்ல
வழிவிடுங்கள்.

குண்டுகளின் நச்சுப் 
புகைகளை அகற்றிவிட்டு
ஆகாயத்தைக் கொஞ்சம் 
அண்ணாந்து பாருங்கள்.

மின்னும் நட்சத்திரங்கள்
பாலைநிலத்தில் இன்னும் 
அழகாய்த்தெரியும்.

சண்டைகளற்ற 
சந்தோசங்களை
உங்கள் குழந்தைகளும்
கண்டு ரசிக்கட்டும்.

சற்று ஓய்வெடுப்பதை விட
முற்றுப் புள்ளி வைத்து விடுங்கள்.

சமாதானத்தில் கிடைக்கும் 
சந்தோசங்களை
இரத்தவாடை வீசும் சூழலில்
ஒரு போதும் காணமுடியாது.

foumi haleemdeen



 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments