Ticker

6/recent/ticker-posts

Ad Code



நாவூரும் சுவையில் முட்டை சால்னா... இப்படி செய்தால் துளியும் மிஞ்சாது


பொதுவாகவே அதிக சத்துக்களை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு சிறந்த தெரிவு முட்டையாகத்தான் இருக்கும்.

முட்டையில் ஏராளமான உணவுகள் செய்ப்படுகின்றது.அப்படி மிகவும் எளிமையாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய முட்டை சால்னாவை நாவூரம் சுவையில் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்
முட்டை - 6

அரைப்பதற்கு தேவையானவை

துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி 

வெங்காயம் - 1

சோம்பு - 1 தே.கரண்டி

பொட்டுக்கடலை - 2 தே.கரண்டி

சீரகம் - 1 தே.கரண்டி

மிளகு - 1 தே.கரண்டி

பச்சை மிளகாய் - 2 

முந்திரி - சிறிதளவு 

தாளிப்பதற்கு தேவையானவை

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி 

பட்டை - 2 துண்டு 

கிராம்பு - 4

கல்பாசி - சிறிதளவு

பிரியாணி இலை - 1 

வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது) 

பச்சை மிளகாய் - 2 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தே.கரண்டி

உப்பு - சுவைக்கேற்ப

தண்ணீர் - தேவையான அளவு 

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரதடதை வைத்து,அதில் முட்டைகளை போட்டு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு மிக்சர் ஜாரில் தேங்காய், வெங்காயம், சோம்பு, பொட்டுக்கடலை, சீரகம், மிளகு, பச்சை மிளகாய் மற்றும் முந்திரி ஆகியவற்றை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக  அரைத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, கல்பாசி, பிரியாணி இலை ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக மாறும் அளவுக்கு நன்கு வதக்க வேண்டும். 

அதன் பின்னர்பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் அதில் சேர்த்து 2 நிமிடங்கள் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து தேவையானளவு  உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்றாக  பத்து நிமிடங்கள் வரையில் கொதிக்கவிட வேண்டும்.

இறுதியாக வேக வைத்த முட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து, இரண்டாக வெட்டி, கொதித்துக் கொண்டிருக்கும் சால்னாவில் சேர்த்து, 2 நிமிடங்கள் வரையில் கொதிக்கவிட்டு  கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் முட்டை வெள்ளை சால்னா தயார்.  

manithan




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments