Ticker

6/recent/ticker-posts

Ad Code



காலை வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்குமா?


தற்போதைய காலகட்டத்தில் ஆரோக்கியமாக இருக்க பல வழிகளை மக்கள் பின்பற்றுகிறார்கள். இதனையொட்டி மக்கள் தங்கள் டயட்டில் பல மாற்றங்களைச் செய்கிறார்கள். தங்கள் உணவுகளில் பூண்டு சேர்ப்பதை பலரும் வழக்கமாக்கி கொண்டுள்ளார்கள்.

ஆனால் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் பூண்டு, ஆரோக்கிய நன்மைகளை நமக்கு அள்ளி தருகிறது. பூண்டு உண்மையில், நம் உடலுக்கு இயற்கையான ஆன்டிபயாடிக் ஆக செயல்படுகிறது.

மெக்னீசியம், கால்சியம், ஜிங்க், செலினியம் மற்றும் வைட்டமின்களான சி, ஏ மற்றும் பி ஆகியவை பூண்டுகளில் நிறைந்துள்ளன. காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் என்ன நடக்கும்!. ஒரு நாளைக்கு எத்தனை பூண்டு பற்கள் சாப்பிடலாம் என்பதை பற்றி பார்க்கலாம்...

மலச்சிக்கலை நீக்குகிறது

பூண்டு சாப்பிடுவது வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிறு தொடர்பான கோளாறுகளை தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தண்ணீரை அடுப்பில் வைத்து அதில் பூண்டு பற்களை சேர்க்கவும். சில நிமிடங்கள் நன்கு கொதிக்க வைத்து பின் இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பது வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. தவிர பூண்டு இதயம் தொடர்பான பிரச்சினைகளையும் குணப்படுத்துகிறது. பூண்டு சாப்பிடுவது ரத்த உறைவைத் தடுக்கிறது மற்றும் மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கிறது. வெறும் வயிற்றில் பூண்டை மென்று சாப்பிடுவது உங்கள் செரிமானத்தை மேம்படுத்துவதோடு பசியையும் தூண்டுகிறது.

நச்சு நீக்கியாக செயல்படுகிறது

பூண்டு ஒரு நேச்சுரல் டீடாக்ஸிஃபையர் ஆகும். இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இதில் உள்ள அல்லிசின் (allicin) என்ற கலவை கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. எனவே இது ரத்த ஓட்டத்திலிருந்து தீங்கு விளைவிக்கும் பொருட்களை திறம்பட அகற்றுகிறது. வழக்கமான அடிப்படையில் உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேற்றப்படுவது அழற்சியை குறைத்து சருமத்தை சுத்தப்படுத்தவும் ஆற்றல் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பூண்டு சிறந்த தேர்வு ஆகும். இதிலிருக்கும் அல்லிசின் என்ற சல்ஃபர் கலவை வெள்ளை ரத்த அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. நம் உடலை தொற்று மற்றும் தீங்கு விளைவிக்கும் கிருமிகளிலிருந்து பாதுகாக்க இவை முக்கியம். காலை வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதன் மூலம், இயற்கையாகவே நம் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகும்.

பூண்டு சாப்பிட சரியான வழி

காலையில் எழுந்தவுடன் 2-3 பூண்டு பற்களை சாப்பிடலாம். நீங்கள் விரும்பினால் அதை வறுத்து சாப்பிடலாம். அதே போல இரவு தூங்குவதற்கு முன் பூண்டு பற்களை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீர் மற்றும் பூண்டை காலையில் எடுத்து கொள்ளலாம்.

news18





 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments