
உலகின் மிக விலை உயர்ந்த 10 பொருட்கள் குறித்து பார்க்கலாம். இந்த பொருட்களின் விலை நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு விலை அதிகமாக இருக்கிறது.
1. சுப்ரீம் படகு (History Supreme Yacht)
வரலாற்று சுப்ரீம் படகு உலகின் மிக விலையுயர்ந்த பொருள் ஆகும். இதன் விலை 4.8 பில்லியன் டாலர்கள். இது உலகின் மிகப்பெரிய படகு என்று அறிவிக்கப்படவில்லை என்றாலும், அதிக ஆடம்பரம் கொண்ட படகாக விளங்கி வருகிறது. இந்த படகு மலேசியாவின் பணக்காரர் என்று அழைக்கப்படும் ராபர்ட் குவோக் என்பவருக்கு சொந்தமானது.
2. ஆண்டிலியா (Antilia)
ஆண்டிலியா என்பது இந்தியாவின் மும்பையில் உள்ள ஒரு 27 மாடி கட்டடமாகும். இது இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரும், தொழில் அதிபருமான முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது.இந்த கட்டடத்தில் மூன்று ஹெலிபேட்கள், ஒன்பது லிஃப்ட்கள், 50 இருக்கைகள் கொண்ட ஹோம் தியேட்டர் மற்றும் பல ஆடம்பரங்கள் உள்ளன. 2010ல் சுமார் 2 பில்லில் டாலர்களில் கட்டி முடிக்கப்பட்ட இந்த கட்டடம் இப்போது 4.6 பில்லியன் டாலர்கள் மதிப்புடையது.
3.வில்லா லியோபோல்டா (Villa Leopolda)
இந்த பட்டியலில் வில்லா லியோபோல்டாவைப் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. இதன் விலை 750 மில்லியன் டாலர்கள் ஆகும். உலகின் மிக விலையுயர்ந்த பொருட்களில் ஒன்றாக இருக்கும் இந்த மாளிகை இரண்டாவது மிக விலையுயர்ந்த தனியார் குடியிருப்பு என்ற பெருமையை பெற்றுள்ளது.
வில்லா லியோபோல்டாவின் வரலாறு இரண்டாம் உலகப் போருக்கு முந்தையது. 1902ல் பெல்ஜியத்தின் மன்னர் இரண்டாம் லியோபோல்டிற்காக கட்டப்பட்டது. போரின்போது மருத்துவமனை பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இந்த கட்டிடம் பல புனரமைப்புகளுக்கு உட்பட்டுள்ளது.
4.சால்வேட்டர் முண்டி ஓவியம் (Salvator Mundi Painting)
ஆடம்பர ஓவியமான சால்வேட்டர் முண்டி ஓவியம் உலகின் மிகவும் விலையுயர்ந்த பொருட்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இடன் விலை $450.3 மில்லியன் டாலர்கள் ஆகும். லியோனார்டோ டா வின்சி வரைந்த இந்த ஓவியம் பொது ஏலத்தில் விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த ஓவியமாக உள்ளது.
5. தி கார்டு பிளேயர்ஸ் பெயிண்டிங் (The Card Players Painting)
'தி கார்டு பிளேயர்ஸ் பெயிண்டிங்' என்பது 1890களில் பால் செசான் வரைந்த ஓவியம். 1890களின் முற்பகுதியில் செசேன்னின் இறுதிக் காலத்தில் வரையப்பட்ட இந்த ஓவியம் சீட்டு விளையாடுபவர்களின் நிலைகளை அடிப்படையாக கொண்டது. இந்த தொடரில் ஐந்து ஓவியங்கள் உள்ளன. இந்த அற்புதமான ஓவியத்தை 2011ம் ஆண்டு கத்தார் 250 மில்லியன் டாலர்கள் என்ற பிரமாண்டமான தொகைக்கு வாங்கியது.
6.பெவர்லி ஹில்ஸ் ஹோம் (Beverly Hills Home)
அமேசான் இணை நிறுவனரான ஜெஃப் பெசோஸ்க்கு சொந்தமானது இந்த 'பெவர்லி ஹில்ஸ் ஹோம்' எனப்படும் ஆடம்பர மாளிகை. 175 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இந்த ஆடம்பர பங்களாவில் இல்லாத வசதிகளே இல்லை. இந்த பங்களா முன்பு டேவிட் கெஃபெனுக்கு சொந்தமாக இருந்தது.
7. டெட் ஷார்க் (Dead Shark)
1991ம் ஆண்டு டேமியன் ஹிர்ஸ்டால் உருவாக்கப்பட்ட "தி பிசிக்கல் இம்பாசிபிலிட்டி ஆஃப் டெத் இன் தி மைண்ட் ஆஃப் சம்ஒன் லிவிங், அக்கா தி ஷார்க்" என்பது உலகின் ஆடம்பரமான கலைப்படைப்பு ஆகும். பல்வேறு அறிக்கைகளின்படி, சுறா ஓவியம் மட்டும் ஹெட்ஜ் ஃபண்ட் பில்லியனர் ஸ்டீவன் கோஹனுக்கு 8 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.
8. மரியா கேரியின் நிச்சயதார்த்த மோதிரம் (Mariah Carey's engagement ring)
"ஆல் ஐ வாண்ட் ஃபார் கிறிஸ்மஸ் இஸ் யூ" பாடலின் பிரபல பாடகி மரியா கேரி, முன்னாள் கணவர் ஜேம்ஸ் பேக்கரிடமிருந்து ஒரு ஆடம்பரமான நிச்சயதார்த்த மோதிரத்தை பரிசாக பெற்றிருந்தார். இந்த மோதிரத்தின் விலை $10 மில்லியன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிச்சயதார்த்த மோதிரம் ஒரு பிரபலத்தால் இதுவரை வாங்கப்பட்ட மிக உயர்ந்த கொள்முதல் என்று பிரைட்ஸ் தெரிவித்துள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்த ஒரு வருடத்திற்குப் பிறகு மோதிரம் தொடர்ந்து அணியப்பட்டு, பின்னர் ஒரு LA நகைக்கடைக்காரருக்கு வெறும் $2.1 மில்லியனுக்கு விற்கப்பட்டது.
9. பிங்க் டயமண்ட் (Pink Diamond)
கிறிஸ்டியின் நகைகளின் அதிகாரப்பூர்வ பக்கத்திலிருந்து மேற்கோள் காட்டப்பட்ட பிங்க் டயமண்ட் ஒரு செவ்வக வடிவிலான தீவிர இளஞ்சிவப்பு வைரமாகும், இது 14.23 காரட் எடை கொண்டது. இந்த அற்புதமான பிங்க் வைரத்தின் ஒவ்வொரு பக்கமும் சுமார் 1.73 காரட் மற்றும் 1.67 காரட் என அளவிடப்படுகிறது.
இந்த 18 காரட் பிங்க் வைரத்தை 2012 ஆம் ஆண்டில் பெயர் வெளியிடப்படாத ஒருவருக்கு 24 மில்லியன் டாலருக்கும் அதிகமாக நிறுவனம் விற்றுள்ளது.
10.சோபார்டு 201 காரட் ரத்தினக் கடிகாரம் (Chopard 201 carat gem watch)
சோபார்டு பிரமாண்டமான நகைகள் மற்றும் கடிகாரங்கள் போன்ற ஆடம்பரப் பொருட்களுக்காக மிகவும் பெயர் பெற்றது. சோபார்டின் 201 காரட் ரத்தினக் கடிகாரத்தின் விலை 874 தனிப்பட்ட ரத்தினக் கற்கள் 25 மில்லியன் டாலர்கள் வரை இருக்கும்.
இந்த கடிகாரத்தில் 11 முதல் 15 காரட் வரையிலான இதய வடிவிலான வைரங்கள் உள்ளன. அவை அற்புதமான தோற்றத்தைப் வழங்குகின்றன. இந்த வைரங்கள் கடிகாரத்தின் டயலின் மையத்தை உருவாக்க இதழ்கள் போல அமைக்கப்பட்டிருக்கும்.
asianetnews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments