
சீன இணையப் பிரபலம் ஒன்றுமே செய்யாமல் நாளொன்றுக்கு 41,000 டாலர் (54,743 சிங்கப்பூர் வெள்ளி) சம்பாதிப்பதாகக் கூறியுள்ளார்.
இணையத்தில் கு சிசி (Gu Xixi) எனும் பெயரைக் கொண்ட அவரைச் சுமார் 5 மில்லியன் பேர் Douyin சமூக ஊடகத்தில் பின்தொடர்கின்றனர்.
அவர் நேரடி காணொளி வழி தாம் சம்பாதிக்கும் தொகையைத் தெரிவித்தார்.
இம்மாதம் (பிப்ரவரி) 8ஆம் தேதிக்கும் 16ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் செய்த நேரடி காணொளி வழி அவருக்கு 1.4 மில்லியன் டாலர் (1.8 மில்லியன் வெள்ளி) கிடைத்தது.
தாம் எதுவுமே செய்யாமல் தம்முடைய Douyin சமூக ஊடகக் கடையில் மில்லியன் கணக்கில் லாபம் ஈட்டுவதாக அவர் சொன்னார்.
இணையவாசிகள் அவரைக் கடுமையாகக் குறைகூறுகின்றனர்.
படுத்துக்கொண்டே பணம் பார்க்கிறேன் என்று சொன்ன அவரை இணையவாசிகள் கடுமையான சொற்களால் பதம் பார்த்தனர்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments