எனது இரு கை விரல்களின், நகத்தை சுற்றியுள்ள இடங்களில் சொறிச்சல் ஏற்பட்டு வீங்குவதோடு சில வேளைகளில் மணக்கவும் செய்கின்றது. நீண்ட காலமாக வைத்தியங்கள் செய்தும் பலனேதும் இல்லை. இதற்கான உங்கள் ஆலோசனை என்ன?
பதில்: கை விரல்களில் நகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சொறிச்சலுடன் வீக்கமும் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. பல்வேறு வகையான கிருமிகளின் தாக்கம், அலர்ஜி, கையை அசுத்தமான நிலையில் வைத்திருத்தல் உட்பட பல காரணங்கள் உள்ளன.
எனவே சிகிச்சை செய்வதற்கு முன்பு நோய்க்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை செய்வதன் மூலமே பூரண நிவாரணம் பெறலாம். இந்நோய் அனேகமாகப் பெண்களிடையே காணப்படுகின்றன.
இங்கு கேள்வி கேட்டிருப்பவர் தனது நகத்தைச் சுற்றியுள்ள இடங்களில் சொறிச்சல் ஏற்பட்டு வீங்குவதோடு சிலவேளைகளில் மணக்கவும் செய்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நீண்ட காலமாக வைத்தியம் செய்தும் பலனேதும் இல்லை எனவும் இதற்கு ஏதும் சிகிச்சை முறைகள் உண்டா எனவும் வினவியுள்ளார்.
இந்நோய்க்குரிய பூரண சுகத்தைக் குறுகிய காலத்தில் பெறமுடியாது. ஒரு சில மாதங்கள் எடுக்கும், வைத்தியர்கள் கூறும் அறிவுறுத்தல்களையும் சரிவரக் கடைப்பிடிக்க வேண்டும்.
யுனானி வைத்தியத்துறையில் நான் மேற்குறிப்பிட்ட காரணங்களினால் ஏற்படக் கூடிய தோல் நோய்களுக்கு சிறந்த சிகிச்சை முறைகளும், சிறந்த ஆலோசனைகளும் வழங்கக்கூடிய வைத்திய நிபுணர்களும் உள்ளனர்.
இறுதியாக வாசகர்களுக்கு ஒரு செய்தியாக சில சகாப்தங்களுக்கு முன் பாடசாலைகளில் மாணவர்களின் கை மற்றும் நகங்கள் சுத்தமாக இருக்கின்றதா என ஆசிரியர்கள் பார்த்ததையும் கை சுத்தமில்லாத மாணவர்களுக்கு தண்டனை வழங்கியதையும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். எனவே கையைச் சுத்தமாக வைத்திருப்போம்.
DR.NASEEM
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments