Ticker

6/recent/ticker-posts

Ad Code



கழிப்பறைக்குச் செல்ல விடுங்கள்: நியூயார்க் டாக்சி ஓட்டுநர்கள் கோரிக்கை


நியூயார்க்கில் டாக்சி ஓட்டுநர்கள் வித்தியாசமான இயக்கத்தை நடத்துகின்றனர்.

கழிப்பறைக்குச் செல்ல அனுமதி அளிக்கும்படி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கழிப்பறைக்கு செல்லவேண்யுள்ள ஓட்டுநர்கள் காரை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.

அவர்கள் கடைகள் அல்லது பேருந்துகளுக்காக ஒதுக்கப்பட்ட தடங்களில் காரை நிறுத்தும் நிலை ஏற்படுகிறது.

அதற்கு ஓட்டுநர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்நோக்குவதாக டாக்சி ஓட்டுநர்களுக்கான நியூயார்க் சம்மேளனம் சொன்னது.

ஓட்டுநர்கள் கழிப்பறைக்குச் செல்லக் காரை நிறுத்தும் நேரங்களில் மட்டும் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று அது கோரியது.

ஓட்டுநர்களுக்குச் சிறப்பு அனுமதி அட்டை வழங்க சம்மேளனம் பரிந்துரைத்தது.

அவர்களின் நலனைக் காக்க அது முக்கியம் என்றும் அது வலியுறுத்தியது.

தற்போது ஓட்டுநர்கள் சிலர் காருக்கு அருகே சிறுநீர் கழிப்பதாக உள்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டன. 

nambikkai

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments