Ticker

6/recent/ticker-posts

Ad Code



போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்


லெபனான் மீது இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது. 

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமுல் ஆனதைத் தொடர்ந்து, இருதரப்பிலும் பிணைக்கைதிகள் பரிமாற்றம் நடந்தது.

அதற்கு முன்பாகவே ஹமாஸுக்கு உதவும் ஹிஸ்புல்லா அமைப்புடனும் இஸ்ரேல், கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டது. 

போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் இரண்டு ஆயுத கூடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

லெபனானின் எல்லைக்கு உட்பட்ட 2 ஆயுத கிடங்குகளில், ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான ஆயுதங்கள் இருந்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது. 

இதனால் அவற்றை துல்லியமாக தாக்கியதாக அந்நாட்டு ராணுவம் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளது.

எனினும் இவ்விவகாரத்தில் இருதரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.      

lankasri

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments