
இந்திய தேர்தலில் உதவ அமெரிக்கா நிதி அளிப்பதை நிறுத்திய அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து இந்தியாவை விமர்சித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், இந்திய தேர்தல்களில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா வழங்கி வந்த 21 மில்லியன் டாலர் நிதியை நிறுத்துவதாக அறிவித்தார். மேலும் கடந்த தேர்தலில் இந்த நிதியை பயன்படுத்தி இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை செய்ய முயற்சிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்தியா குறித்து பேசியுள்ள அவர் “இந்திய தேர்தலில் உதவுவதற்காக டாலர்களை வழங்குதற்கு பதிலாக நாம் ஏன் பழைய காகித வாக்குச் சீட்டுகளுக்கு மாறி அவர்களின் தேர்தலுக்கு உதவக்கூடாது? இந்திய தேர்தலுக்கு நாம் பணம் கொடுக்கிறோம். ஆனால் அவர்களுக்கு பணம் தேவையில்லை. உலகில் அதிக வரி விதிக்கப்படும் நாடுகளில் இந்தியா ஒன்று. நாம் அங்கு எதையாவது விற்க முயலும்போது 200 சதவீத வரி விதிக்கிறார்கள். அதற்கு பிறகும் நாம் அவர்களுக்கு தேர்தலுக்கு பணம் கொடுக்க வேண்டும். அவர்கள் நம்மை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்” என பேசியுள்ளார்.
webdunia

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments