Ticker

6/recent/ticker-posts

Ad Code



செவ்வந்தியின் உருவத்திற்கு இணையான யுவதி ஒருவர் கைது


கணேமுல்ல சஞ்ஜீவவின் (Ganemulla Sanjeeva) கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபராகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி என்பவரின் உருவத்திற்கு இணையான யுவதி ஒருவர் மத்துகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக செய்திகள்  வெளியாகியுள்ளன. 

கைது செய்யப்பட்ட குறித்த பெண் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

23 வயதான குறித்த யுவதி மத்துகம பகுதியில் உள்ள தமது வீட்டிற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் மறைந்திருந்ததாகவும் அப்போது கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில், குறித்த யுவதியின் கையடக்க தொலைப்பேசியைப் பரிசோதனை செய்வதற்காக நீதிமன்றத்திடம் உத்தரவைப் பெற்று அடுத்த கட்ட விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

tamilwin

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments