கிரிக்கெட் வெற்றியைக் கொண்டாடிய இளைஞர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்(25) என்பவர் சென்னையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர் வேலை செய்து வரும் நிறுவனங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்தது.
அப்போது, இவரது நிறுவனத்திற்கு ஆதரவு தெரிவித்த கார்த்திக் வந்துள்ளார். போட்டி முடிவடைந்த பிறகு உற்சாகமடைந்த கார்த்திக் மைதானத்தைச் சுற்றி வந்துள்ளார்.பின்னர் சிறிது நேரத்தில் திடீரென சுருண்டு மயங்கி கீழே விழுந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கார்த்திக் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கார்த்திக் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.
ibctamilnadu

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments