Ticker

6/recent/ticker-posts

Ad Code



பனி மலையில் சிக்கிய இளைஞர்.. 10 நாட்கள் Tooth Paste சாப்பிட்டு உயிர் தப்பிய சம்பவம்!


பனி மலையில் சிக்கிய இளைஞர் ஒருவர் 10 நாட்கள் டூத்பேஸ்ட் சாப்பிட்டு உயிர் தப்பியுள்ளார்.

வடமேற்கு சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் ​​குயின்லிங் மலைப் பகுதி உள்ளது. இந்த மலைத் தொடர் சுமார் சுமார் 2,500 மீட்டர் உயரம் மற்றும் தாவரங்கள் மற்றும் வனவிலங்குகளின் வாழ்விடமாக உள்ளது. இந்த பகுதி முழுவதும் பனியால் சூழப்பட்டு இருக்கும்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி சன் லியாங் என்ற 18 வயதுடைய இளைஞர் சோலோ ஹைக்கிங் பயணம்(மலையேற்ற பயணம்) செய்துள்ளார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது மின்னணு சாதனங்கள் பேட்டரி தீர்ந்ததால் அவர் தனது குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதன்பிறகு, சன் லியாங் ஒரு சிற்றோடை வழியாகக் கீழ்நோக்கி நடந்து சென்ற போது கீழே விழுந்து அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் கடுமையான காற்றிலிருந்து தப்பிக்க,அவர் ஒரு பெரிய பாறையின் பின்னால் தஞ்சம் அடைந்தார்.

அங்கு உலர்ந்த வைக்கோல் மற்றும் இலைகளைப் பயன்படுத்தி ஒரு தற்காலிக படுக்கையை உருவாக்கித் தங்கியுள்ளார். மேலும் சாப்பிட உணவு கிடைக்காததால், தன்னிடம் இருந்த டூத்பேஸ்டை சாப்பிட்டு, ஆற்றில் உள்ள தண்ணீரைக் குடித்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து சன் லியாங் பெற்றோரின் கோரிக்கையை ஏற்றுப் பிப்ரவரி 17 அன்று தேடல் மற்றும் மீட்புக் குழு மலைகளுக்குச் சென்று பனி மலையில் சிக்கிய இளைஞரை மீட்டுள்ளனர்.

170 கிமீ நீளமுள்ள Ao-Tai லைன், சீனாவின் மோசமான கணிக்க முடியாத வானிலை மற்றும் சவாலான ஹைகிங் பாதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ibctamilnadu

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments