மகிழ்ந்தான்தசரதன்
வாழ்விலே நற்பேறு பெற்றுவிட்டேன் என்றேதான்
பேரரசன் இன்புற்றான் அங்கு.
விசுவாமித்திரர்வருகை
வந்ததன் நோக்கத்தைக் கேட்டான் தசரதன்!
நொந்தான் உரைத்ததைக் கேட்டு.
அரக்கர்கள் தொல்லை தடுக்க இராமன்
ஒருவனைத் தாவென்றான் கேட்டு.
முனிவனிடம் ராம இலக்குவரைத் தந்தான்!
வனம்நோக்கிச் சென்றார் நடந்து.
தாடகைவதம்
தாடகை காடதிரப் போரிட்டாள் !ராமனோ
நாடுபோற்ற செய்தான் வதம்.
கைவண்ணம்அங்கே; கால்வண்ணம்இங்கே!
தாடகைப் போரிலே கைவண்ணம் காட்டினான்!
ஈடற்ற ஆற்றல்தான் பார்.
கல்மீது கால்வண்ணத் தாலே அகலிகை
கல்லுரு நீத்தாள் உயிர்த்து.
மிதிலைநகருக்குள்
மிதிலை நகருக்குள் மூவரும் சென்றார்!
நதிபோல் நடந்திருந்தார் ஊர்ந்து.
கன்னிமாடம்
கன்னிமாட முற்றத்தில் சீதையோ நின்றிருந்தாள்
அண்ணலங்கே நாடிவந்தார் நின்று.
நோக்கினர்
அண்ணலும் நோக்கினான்; ஆரணங்கும் நோக்கினாள்!
கண்களோ கவ்வின காண்.
இதயங்கள்ஒன்றின
சீதையும் ராமனும் ஈருடல் ஓருயிராய்
ஆகிவிட்டார் மெய்மறந்தே தான்.
பிரிந்தவர்சந்திப்பு
பாற்கடலை விட்டிறங்கி வந்தவர்கள் பூக்கடலாம்
பாரிலே சந்தித்தார் இங்கு.
இராமனின்ஏக்கம்
பூமகளின் உள்ளம் தொடர்ந்துவர ஏக்கமுடன்
பாமகன் சென்றான் தளர்ந்து.(தொடரும்)
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments