
ஆதிவாசிகள் களியாட்டம் புரோகோனிஷ் கிராமத்தின் திருமண வீட்டை கலைகட்டச் செய்திருந்தது!
அதிகாலை முதல் ஒட்டுமொத்த புரோகோனிஷ் மக்களோடு சேர்ந்து யனோமாமி, முரா, முண்டூரா, பரோனி, ஹூரானி, கயாபோ, பன்ரா, திசானா - அரபாசோ - பாரா - பராசனா - கொடிரியா - குபியோ - அமகுனா - பிரா தபுயா - மிரிடி தபுயா -சிரியானோ -டுகானோ - டுயுகா - டடுயுர் - தாய்வானோ மற்றும் யுறுதி போன்ற அமேசான் வனத்தைச் சுற்றி வாழ்ந்துவரும் பல்வேறுபட்ட பழங்குடியினரும் வனத்துக்குள் விரட்டப்பட்ட புதுமணத் தம்பதியினரின் வருகையை எதிர்பார்த்து ரெங்க்மாவின் ஜாகை முன்றலில் காத்திருந்தனர்!
முன்றலுக்கு வந்து சேர்ந்த புதுமணத் தம்பதியினரைச் சூழ்ந்த வண்ணம் அவர்கள் சுறுசுறுப்பாக ஆடிப்பாடினர்.
ஆங்காங்கே தீமூட்டப்பட்டு மான்களும் மரைகளும் வெந்து கொண்டிருந்தன. விரும்பியோர் ஊற்றிக் குடிப்பதற்காக மதுபானமும் குவளைகளும் அங்கு வைக்கப்பட்டிருந்ததன.
ரெங்க்மாவின் ஜாகையோடு சேர்ந்தாற்போல மூங்கில் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த மணமக்களுக்கான பிரத்தியேக அறை அலங்கரிக்கப்பட்டு பல வர்ண மலர்கள் சுவர்களில் சொருவப்பட்டிருந்தன. வனத்தில் காணப் படுகின்ற பூசணி, வரக்கா, அன்னாசி போன்ற பழங்களும் ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருந்தன.
வனத்துக்குள்ளிருந்து வந்துசேர்ந்த புதுமணத் தம்பதியினர் அமேசான் மக்கள் தந்த வரவேற்பால் தங்களது களைப் பைக் கூடப்பொருட்படுத்தாது அவர்களோடு சேர்ந்து ஆடலாயினர்.
ரெங்க்மாவின் தந்தை வனத்துக்குப் போனதும், அங்கிருந்து வந்த வடு தெரியாதவாறு தானும் அவர்களோடு சேர்ந்து சந்தோசமாக ஆடிப்பாடிக் கொண்டிருப்பதும், சொர்யாவை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தது!
செரோக்கியையும் ரெங்க்மாவையும் புரோகோனிஷ் வனவாசிகள் தாரதப்பட்டங்களோடு, அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அறைவரை அழைத்துச்சென்று அறைக்குள் தள்ளிவிட்டு, பன்னோலைக் கதவைச் சாத்திவிட்டனர்!
(தொடரும்)
செம்மைத்துளியான்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments