
மீட்டாத வீணை
நாதம் தராது
உருட்டாத பரமபதம்
தாயம் தராது
ஊதாத புல்லாங்குழல்
கீதம் தராது
கூவாத குயில்
சங்கீதம் கற்றிடாது
அடியாத மணி
ஓசையிடாது
அழாத மழலை
பாலைத் தேடாது
ஓசையில்லா விட்டால்
அது ஆழியில்லை
ஆசை வரவில்லை
என்றால் உணர்ச்சி
உள்ள உயிரில்லை.
பெண்ணே இதில் நீ
எவையெனக் கூறடி
மீட்டாத வீணையாக நீயும்
தீண்டாத விரல்கள்களாக
நானும்
வாழ்வது கொடுமையடி
ஆர் எஸ் கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments