
Champions Trophy | ஒரு ரன்னுக்கு ரூ. 3,00,000 சம்பாதித்து 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் காஸ்ட்லி வீரராக உருவெடுத்துள்ள கிரிக்கெட் வீரர் யார்?
நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில், ஒரு வீரர் கவனிக்கப்படும் வீரராக மாறியுள்ளார். களத்தில் அவர்களின் செயல்திறனுக்காக மட்டுமல்ல, அவர் பெறும் வருமானத்திற்காக கிரிக்கெட் உலகில் பேசுபொருளாக அமைந்துள்ளார். இந்த வீரர் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் பாபர் அசாம் போன்ற பிரபல வீரர்களை தனது சம்பளம் காரணமாக முந்தியிருக்கிறார். நம்ப முடியாத அளவுக்கு தான் எடுக்கும் ஒரு ரன்னுக்கு ரூ. 3,00,000 சம்பாதித்து சாதனை படைத்து 2025 சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் விலையுயர்ந்த வீரராக மாறியுள்ளார் அந்த வீரர்.
உலகில் அதிக பணம் கொழிக்கும் பிசிசிஐ வாரியத்தின் கீழ் செயல்படும் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா ஒரு ரன்னுக்கு ரூ.19,672 வருமானம் பெறுகிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மா இரண்டு போட்டிகளில் 61 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், கிரிக்கெட் வீரர்களின் சமீபத்திய ஒப்பந்தத்தின்படி, பிசிசிஐ ரோஹித் சர்மாவுக்கு ஒரு ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சம் ஊதியமாக வழங்குகிறது.
அதுவே, விராட் கோலி ஒரு ரன்னுக்கு ரூ.9,806க்கு மேல் சம்பாதிக்கிறார். இதன்படி, நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 2 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 122 ரன்கள் எடுத்ததற்காக விராட் கோலி, பிசிசிஐயிடமிருந்து போட்டிக் கட்டணமாக ரூ.12 லட்சம் ஊதியமாக பெறலாம்.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இரண்டு போட்டிகளில் 87 ரன்கள் எடுத்து, அவர் இதுவரை ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பாதித்துள்ளார். பிசிபி ஒப்பந்தத்தின்படி அவருக்கு ஒரு ஒருநாள் போட்டிகளுக்கு 4.5 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. பாகிஸ்தான் அணியில் தற்போதைக்கு அதிக ஊதியம் பெறும் நபர் பாபர் அசாம் தான்.
எனினும், அவரையும் தாண்டி நடப்பு சாம்பியன்ஸ் தொடரில் ஒரு ரன்னுக்கு ஒரு வீரர் ரூ.3,00,000 வரை வருமானம் ஈட்டியுள்ளார். அவர் வேறு யாருமல்ல, பாகிஸ்தான் அணியின் ஓப்பனிங் வீரர் இமாம் உல் ஹக் தான் என்கிறது ஒரு தரவு.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இமாம் உல் ஹக் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்றார். காயமடைந்த ஃபக்கர் ஜமானுக்குப் பதிலாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய இமாம் மொத்தம் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். எனினும், ஒரு ரன்னுக்கு ரூ.3,00,000 வீதம் என்கிற அடிப்படையில் அவருக்கு 3 மில்லியன் அதாவது 30 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் ஊதியம் கிடைக்கும். இதன்மூலம் நடப்பு சாம்பியன்ஸ் தொடரில் முன்னணி வீரர்களை விஞ்சி காஸ்ட்லி வீரராக உருவெடுத்துள்ளார் இமாம் உல் ஹக்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments