Ticker

6/recent/ticker-posts

Ad Code



திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-181


குறள் 658
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.

இதுல்லாம் சரிப்பட்டு வராதுன்னு வெலக்கி வச்சதை எல்லாம், வேணும்னு செஞ்சாக்கா, அந்த ஜோலி முடிஞ்சாலும் தும்பம் தான் தரும். 

குறள் 660
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.

தப்பான வழியில சொத்து சேர்த்து, அதைப் பாதுகாப்பது எப்படி இருக்கும்னா, பச்சை மண் சட்டியில தண்ணி ஊத்தி அதை பாதுகாப்பது மாதிரி இருக்கும். 

குறள் 661
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
 
ஒரு வேலையை செஞ்சு முடிக்கணும்னு இருக்கக் கூடிய உறுதிங்கிறது ஒருத்தனோட மன உறுதியைப் பொறுத்தது. மத்ததெல்லாம் அதுக்குப் பொறவு தான். 

குறள் 662
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.

சிக்கல் எதுவும் வாரதுக்கு முந்தியே தடுக்கிறது, அப்படியும் வந்துட்டா மனசு தளராம இருக்கது, இந்த ரெண்டும் அறிவுடையவங்க கடைப் பிடிக்க்க்கூடிய வழிமுறைகள்.

குறள் 663
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.

ஒரு வேலையை செஞ்சு முடிக்கிற வரை அதைப்பத்தி வெளியே மூச்சு விடக் கூடாது. இதுதான் செயல் உறுதிங்கிறது. இது பத்தி இடையிலயே வெளிய தெரிஞ்சிட்டா நெறைய இடைஞ்சல்லாம் வந்துரும். 

(தொடரும்)

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments